அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் த். விஷ்வேஷ் பா. சாஸ்திரி அவர்களின் உத்தரவின்படி, 25.11.2025 அன்று ஆர்.எஸ். மாத்தூர் ஸ்டேட் பேங்க், அசவீரன்குடிக்காடு கிராமம், இடையக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே இணைய வழி குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஓடிபி எண்களைப் பகிரக் கூடாது, தெரியாத லிங்குகளைத் தொடக் கூடாது, டிஜிட்டல் கைது, கிரிப்டோ கரன்சி மோசடி, வெளிநாட்டு வேலை மோசடி, தேவையில்லாத அப்ளிகேஷன்கள் போன்ற இணைய வழி குற்றங்கள் குறித்து விளக்கப்பட்டது.