அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே நாகல்குழி கிராம மாரியம்மன் ஆலயத்தின் ஆண்டு திருவிழாவில், சமயபுரம் மாரியம்மன் கோவில் பக்தர்கள் மாலை அணிந்து, காப்பு கட்டி விரதமிருந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பால்குடம், சக்தி கரகம், தீச்சட்டி ஏந்தி "ஓம் சக்தி" முழக்கத்துடன் நடைபெற்ற ஊர்வலத்திற்குப் பிறகு, அம்மனுக்கு பாலாபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.