அரியலூர் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் மேம்படுத்தப்பட்ட தாய்-சேய் நல மையத்தில் மாவட்ட ஆட்சியர் திருமதி ந. மிருணாளினி இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். மகப்பேறு, குழந்தைகள் மற்றும் புறநோயாளிகள் பிரிவுகளின் மருத்துவ சேவைகளை பார்வையிட்ட அவர், மருந்து இருப்பு மற்றும் நோயாளிகள் எண்ணிக்கை குறித்து கேட்டறிந்தார். மருத்துவமனை வளாகத்தை தூய்மையாக பராமரிக்கவும், பொதுமக்கள் மற்றும் அவசர ஊர்திகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகளை மேம்படுத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், 24 மணி நேர அவசர சிகிச்சை மருத்துவமனை கட்டடம் அமைக்கும் இடத்தையும் ஆய்வு செய்தார்.