அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. போட்டிகளானவை 9 வயதுக்கு உட்பட்டவர்கள், 12 வயதுக்கு உட்பட்டவர்கள், 15 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆண், பெண் தனியாகவும், பொது பிரிவுக்கான போட்டிகளும் நடைபெற உள்ளன. வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்படும்.