பெரம்பலூர் வேப்பூர் அரசு மருத்துவமனையில், புதிய கட்டிடம் திறப்பு விழாவிற்கு மருத்துவர்கள் சென்றதால், நோயாளிகளுக்கு சிகிச்சை கிடைக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படாத நிலையில், இதுகுறித்து வீடியோ எடுத்த செய்தியாளரை மருத்துவர் கோபிகண்ணன் தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இந்த சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.