அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூரில் செயல்படும் இரண்டு டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி பெண்கள் கருவேல முட்களை சாலையில் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி மாணவர்கள் மது பழக்கத்துக்கு ஆளாகும் சூழல் உருவாகியுள்ளதாக குற்றம்சாட்டிய அவர்கள், கடையை திறக்க விடமாட்டோம் என போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். "
விஜய் அண்ணா, எங்களுக்கு தாய்மாமன் சீர் வேண்டாம்; டாஸ்மாக் கடையை அகற்றினாலே போதும்" என பெண்கள் கோரிக்கை விடுத்தனர்.