அரியலூரில் திறந்தவெளியில் மது அருந்தும் அவலம்

653பார்த்தது
அரியலூரில் திறந்தவெளியில் மது அருந்தும் அவலம்
முதலமைச்சர் விஜய் உத்தரவின் பேரில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில், அரியலூரில் எங்கு பார்த்தாலும் காலி மதுபாட்டில்கள் சிதறிக்கிடக்கின்றன. திறந்தவெளி மைதானங்கள், சாலைகள், பூங்காக்கள் என அனைத்து இடங்களிலும் குடிமகன்கள் மது அருந்தி வருகின்றனர். பெண்கள் நடமாட்டம் இருந்தும் கண்டுகொள்ளாமல், மதுபாட்டில்களை பொதுமக்களின் மீது வீசும் சம்பவங்களும் நடக்கின்றன. திறந்தவெளியில் மது அருந்துவதற்குத் தடை விதித்து, அபராதம் விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி