அரியலூர் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில், செவ்வாய்க்கிழமை (17.02.2026) காலை 10 மணியளவில் அரியலூர் நிர்மலா பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பின் கவுன்சிலர்களுக்கு போதைப்பொருள் நுகர்வு தடுப்பு மற்றும் தற்கொலை தடுப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இதில், ஜூனியர் ரெட் கிராஸ் அலுவல் சார் துணைத்தலைவர் திரு. வேல்முருகன், மாவட்ட கல்வி அலுவலர் (பொ) முன்னிலையில் விழிப்புணர்வு புத்தகத்தை வெளியிட்டார்.