அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தலைமையில், அரசு அதிகாரிகள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை அலுவலர் சரவணன் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். இந்நிகழ்ச்சியில் அரசு ஊழியர்கள் மற்றும் பிற துறை சார்ந்த அதிகாரிகளும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.