அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சூரியமணல் கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி (75) என்பவர், திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றபோது, பின்னால் வந்த தனியார் பேருந்து மோதி பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜெயங்கொண்டம் போலீசார் விபத்து ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.