பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் அரங்கநாதன் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில், பொது விநியோகத்திற்கான தனித்துறை, சரியான எடையில் பொருட்கள் வழங்குதல், ஓய்வூதியம் உள்ளிட்ட 15 முக்கிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.