சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இல்லத்தில் இயற்கை வேளாண் பாராம்பரிய வாழ்வியல் மீட்டல், உணவுக்காடுகள் உலகப் பரவலாக்கல், இயற்கை மழை நீர் சேமிப்புக் கலன் ஒவ்வொரு வீட்டிலும் அமைத்து மருத்துவக் குணம் வாய்ந்த வகையில் சமைத்தல் மற்றும் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். நாட்டு மாடுகள், எருதுகள், பசுக்கள், எருமைகள் ஒவ்வொரு ஊரிலும் தனியார்கள் மற்றும் எல்லா குடும்பங்களிலும் கொண்டு வாழும் தற்சார்பு வாழ்வியல் பண்டமாற்று முறையில் உறவுப்பாலம் அமைக்க வேண்டும். உழவு இல்லையேல் உலகு இல்லை. உழவே தலை, உணவே மருந்து என்ற எண்ணம் அடிப்படையில் புதிய தலைமுறை தழைக்க வேண்டும். எல்லோரும் போற்றும் வகையில் அவரவர் வாழ்க்கையை மற்றொருவரை சார்ந்து வாழ வேண்டும் என்று விவசாய சங்கம் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.