அரியலூர் மாவட்டம் திருமானூரில் காந்தி துரை என்பவருக்குச் சொந்தமான அம்பாள் மிக்ஸி கிரைண்டர் சர்வீஸ் கடையில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. திருமானூர் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில், பழுது நீக்கம் செய்யப்பட்ட ஏர் கூலர், மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.