அரியலூர் மாவட்டம் குறிச்சநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பொன்னுசாமி தனியார் கல்லூரியில் எம்பிஏ படிப்பதற்காக, ரமேஷ் என்பவரிடம் ரூ. 4.5 லட்சம் பணம் கொடுத்துள்ளார். ஆனால் பணத்தை பெற்றுக் கொண்ட ரமேஷ், சீட் வாங்கி தராமல் ஏமாற்றியுள்ளார். இதனையடுத்து, பொன்னுசாமி மாவட்ட குற்றப்பிரிவில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டது.