அரியலூர் மாவட்ட ஆட்சியர் பொ. இரத்தினசாமி தலைமையில் அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குடிநீர், மனைப்பட்டா, மின்சாரம், சாலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 324 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் பல்வேறு துறை அலுவலர்களும் கலந்துகொண்டனர்.