அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள குவாகம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் ஆலயத்தில் நேற்று குருபூஜை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு, சுவாமிக்கு பதினாறு வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து பரவசம் அடைந்தனர்.