அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் 13 பாடப்பிரிவுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். 30 நிரந்தர பேராசிரியர்களுடன் 79 கௌரவ விரிவுரையாளர்கள் பணியாற்றுகின்றனர். புள்ளியல், சுற்றுச்சூழல் அறிவியல் பிரிவுகள் முழுவதும் கௌரவ விரிவுரையாளர்களால் நடத்தப்படுகின்றன. கடந்த மூன்று நாட்களாக அவர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் வகுப்புகள் நடைபெறாமல் மாணவர்கள் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்தனர். இதனால் மாணவர்கள் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.