அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்பு

0பார்த்தது
அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்பு
இந்திய அரசு 2025-26 ஆம் ஆண்டில் பருத்திக்கான குறைந்தபட்ச ஆதார விலையை 8% உயர்த்தி, குவிண்டால் ஒன்றிற்கு நடுத்தர இழை பருத்தியை ரூ. 7,710 ஆகவும், நீண்ட இழை பருத்தியை ரூ. 8,110 ஆகவும் நிர்ணயித்துள்ளது. இதன் மூலம் விவசாயிகள் பயனடைய, அரியலூர் மாவட்ட விவசாயிகள் அரியலூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் மற்றும் மேலணிக்குழி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் தங்களது ஆதார் அட்டை, சிட்டா, அடங்கல் ஆகியவற்றுடன் கபாஸ் கிஸான் செயலியில் 30.11.2025 வரை முன்பதிவு செய்யுமாறு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அறிவுறுத்தியுள்ளது. முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே இத்திட்டத்தில் பயன்பெற முடியும்.

தொடர்புடைய செய்தி