‘இண்டி’ கூட்டணி - தொல்.திருமாவளவன் முக்கிய தகவல்

3பார்த்தது
‘இண்டி’ கூட்டணி - தொல்.திருமாவளவன் முக்கிய தகவல்
அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய தொல்.திருமாவளவன், 'இண்டி' கூட்டணிக்கு யார் தலைமை தாங்குவது அல்லது ஒருங்கிணைப்பது என்பது குறித்து தேசிய அளவிலான மூத்த தலைவர்கள் முடிவு செய்வார்கள் என்றும், அதில் கருத்து சொல்ல எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார். 'இண்டி' கூட்டணி காலத்தின் தேவை என்றும், வலதுசாரிகளிடமிருந்து நாட்டையும் மக்களையும் காப்பாற்ற இது மிக அவசியம் என்றும் அவர் கூறினார். எனவே, தலைமைப் பொறுப்பு குறித்து மூத்த தலைவர்கள் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.