அரியலூர்: இளைஞர்களுக்கு புத்தாக்க பொறியாளர் பயிற்சி

77பார்த்தது
அரியலூர்: இளைஞர்களுக்கு புத்தாக்க பொறியாளர் பயிற்சி
தமிழ்நாடு ஆதித் திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த இளநிலை பொறியியல் பட்டதாரி இளைஞர்களுக்கு புத்தாக்க பொறியாளர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சி 18 வாரகால பயிற்சியாகும். பயிற்சி பெற விருப்பமுள்ளவர்கள் தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.