கீழப்பழுவூர் அருகே ஆறுமுகம், அவரது மனைவி செல்வராணி, செல்வராணியின் தம்பி கருப்பையா ஆகியோர், ஒரு லட்சம் ரூபாய்க்கு நாள் ஒன்றுக்கு 500 ரூபாய் வட்டி தருவதாகக் கூறி 30க்கும் மேற்பட்டோரிடம் பணம் மற்றும் நகைகள் பெற்று மோசடி செய்துள்ளனர். பணத்தை இழந்த ராஜுவின் புகாரின் பேரில், செல்வராணி, கருப்பையா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த மோசடியில் சுமார் 2 கோடியே 80 லட்சம் ரூபாய் பணமும், 19 1/2 பவுன் நகையும் பறிபோனதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆறுமுகம் தலைமறைவாக உள்ளார்.