அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயம், தமிழ்நாட்டின் முக்கிய சரணாலயங்களில் ஒன்றாகும். அக்டோபர் முதல் மே மாதம் வரை, மத்திய ஆசியா, திபெத், லடாக், வடக்கு ரஷ்யா, சைபீரியா போன்ற தொலைதூரப் பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பறவைகள் இங்கு வந்து தங்கி இனப்பெருக்கம் செய்கின்றன. கூழைக்கிடா, பாம்பு நாரை, மைல் கால் கோழி, வண்ண நாரை, மடையான், நாமக்கோழி, சிறைவி போன்ற பல்வேறு பறவை இனங்கள் இங்கு காணப்படுகின்றன. இந்த சரணாலயம் பறவைகளின் வாழ்வாதாரத்திற்கும், இயற்கை சூழல் பாதுகாப்பிற்கும் முக்கியப் பங்காற்றுகிறது.