அரியலூரில் கருணாநிதியின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற ரத்ததான முகாமுக்கு வந்த முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, முதல்வர்
ஸ்டாலின் மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதில் கவனம் செலுத்தவில்லை என்றும், நன்றி அறிவிப்பு கூட்டத்தை தேர்தல் பிரச்சார மேடையாக பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், "தவெக ஆட்சியால் ஏற்பட்ட மன அழுத்தத்திற்கு, அமைச்சர்களின் செயல்பாடுகளே தற்போது எங்களுக்கு பெரிய ரிலீஃபாக உள்ளன. தினமும் அவர்கள் செய்யும் செயல்கள் மக்களை சிரிக்க வைக்கின்றன" என்று கிண்டலாக கருத்து தெரிவித்தார்.