ஜெயங்கொண்டம் அருகே 2 டாஸ்மாக் கடைகளால் பொதுமக்களுக்கும், பள்ளி செல்லும் மாணவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மது அருந்திவிட்டு செல்பவர்கள் கால்நடைகளை உதைப்பதாகவும், இதனால் பல்வேறு இன்னல்கள் ஏற்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். தகவல் அறிந்து வந்த ஜெயங்கொண்டம் டிஎஸ்பி தினேஷ்குமார் தலைமையிலான போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து, மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.