ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் உள்-புற நோயாளிகள், உறவினர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என 150க்கும் மேற்பட்டோருக்கு ஆசிரியர் திரு. K. நடராஜன் – திருமதி மல்லிகா நடராஜன் குடும்பத்தார் சார்பில் உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு உதவும் கரங்கள் அமைப்பு ஏற்பாடு செய்தது. உணவு தயாரித்த ஹோட்டல் ஸ்ரீ கார்டன் உரிமையாளருக்கும், நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் உதவும் கரங்கள் அமைப்பு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டது.