ஜெயங்கொண்டம்: குடிநீர் தட்டுப்பாடு.. கிராம மக்கள் சாலை மறியல்

724பார்த்தது
ஜெயங்கொண்டம் அருகே சிலால் கிராமத்தில் மூன்று மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் காலி குடங்களுடன் ஜெயங்கொண்டம் - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். தா.பழூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும், அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என பொதுமக்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர். பின் ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி