ஜெயங்கொண்டம்: வாழைப்பழத்தில் விஷம்; மயங்கி விழுந்த விவசாயி

2பார்த்தது
ஜெயங்கொண்டம்: வாழைப்பழத்தில் விஷம்; மயங்கி விழுந்த விவசாயி
ஜெயங்கொண்டம் அருகே புதுக்குடியில், கி.சுந்தரவேல் (70) என்ற விவசாயி, எலித் தொல்லைக்காக வைக்கப்பட்டிருந்த விஷம் கலந்த வாழைப்பழத்தை தவறுதலாக சாப்பிட்டு மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கும், பின்னர் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜெயங்கொண்டம் காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி