அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நான்கு ரோடு சந்திப்பில், காவல் நிலையம் எதிரில் உள்ள வடிக்காலில் இருந்து கழிவுநீர் வெளியேறி கடும் துர்நாற்றம் வீசுவதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.