அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருள்மிகு ஸ்ரீ பூர்ணபுஷ்கலா சமேத அய்யனார் கோயிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து தினந்தோறும் சிறப்பு வழிபாடுகள் நடந்து வரும் நிலையில், விசேஷ பூஜைகள் நடைபெற்றன. செல்வ விநாயகர், அய்யனார் , கருப்புசாமி, வீரனார் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாரதனை, பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கிராமவாசிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.