ஜெயங்கொண்டம்: மதுபானங்களை கள்ளச் சந்தையில் விற்ற இருவர் கைது

608பார்த்தது
ஜெயங்கொண்டம்: மதுபானங்களை கள்ளச் சந்தையில் விற்ற இருவர் கைது
ஜெயங்கொண்டம் காவல் நிலைய ரோந்து காவலர் லியோ நீதிநாதன் தலைமையிலான காவல்துறையினர், செவ்வாய்க்கிழமை ரோந்து பணியின் போது, மணக்கரை பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (30) மற்றும் விக்னேஷ் (20) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். இவர்கள் டாஸ்மாக் மதுபானங்களை கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, காவல்துறையினர் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 66 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி