கேரளாவைச் சேர்ந்த ஆதித்யன் (21) மற்றும் மருக்காலங்குறிச்சியைச் சேர்ந்த சரண்யா (18) ஆகியோர் ஜெயங்கொண்டம் - காட்டுமன்னார்குடி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சுமை ஆட்டோ மோதி விபத்துக்குள்ளாகினர். இதில் சரண்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த ஆதித்யன் மருத்துவமனையில் இறந்தார். விபத்து ஏற்படுத்திய சுமை ஆட்டோ கண்டெடுக்கப்பட்டுள்ளது, இது குறித்து ஜெயங்கொண்டம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.