அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதி ஆண்டிமடம் தெற்கு ஒன்றியத்திலுள்ள இலையூர் ஊராட்சியில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் க. சொ. க. கண்ணன் தனது தேர்தல் பிரச்சாரத்தை திங்கள்கிழமை தொடங்கினார். திராவிட மாடல் அரசின் ஐந்தாண்டு சாதனைகளை விளக்கி, தமிழக முன்னேற்றம் தொடர உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.