அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள வெண்மான்கொண்டான் கிராமத்தில் சங்கிலி கருப்பு, விநாயகர், நாச்சியார் அம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு நடைபெற உள்ள கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று கணபதி ஹோமத்துடன் பூஜைகள் தொடங்கின. தற்போது இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அருள்பெற்றனர்.