அரியலூா் மாவட்டத்திலுள்ள ஆதாா் சேவை மையங்களில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா். அரியலூா் மாவட்டத்தில் ஆட்சியரகம், தலைமை அஞ்சலகம், வங்கிகள், வட்டாட்சியா் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் ஆதாா் சேவை மையங்கள் செயல்படுகின்றன. தற்போது ஆதாா் பதிவு மற்றும் திருத்தம் பணிகளுக்காக மக்கள் குவிவதால், பணிகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால், ஆதாா் மையங்களில் கூடுதல் பணியாளா்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.