அரியலூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகள் தொடங்கப்பட்டன. அதனை முன்னிட்டு மாணவ மாணவியர் தங்களது நண்பர்களை கண்ட மகிழ்ச்சியில் உற்சாகமாகக் காணப்பட்டனர். மேலும் புது மாணவர்களும் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். இவர்களுக்கு அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா விலையில்லா நோட்டுப் புத்தகங்களை வழங்கினார்.