அரியலூர்: தொழிலாளி கொலை.. பரபரப்பு தீர்ப்பு

84பார்த்தது
அரியலூர்: தொழிலாளி கொலை.. பரபரப்பு தீர்ப்பு
அரியலூர் மாவட்டம் வெங்கனூர் அருகே கொரத்தக்குடி கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன். இவரது வீட்டில் 6 வருடங்களாக டிராக்டர் ஓட்டுனராக வேலை பார்த்து வந்தவர் ரமேஷ். மனோகரனின் மனைவி புஷ்பவள்ளி எந்த வேலையாக இருந்தாலும் ரமேஷை கேட்டு செய்வது வழக்கம் என கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்தது. இதனால் ஆத்திரமடைந்த மனோகரன் ரமேஷை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் மனோகரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி