மாலை அணிந்து, விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்

1பார்த்தது
கார்த்திகை மாதத்தின் முதல் நாளான இன்று, அரியலூர் மாவட்டத்தில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினர். ஸ்ரீ பாலபிரசன்ன சக்தி விநாயகர் ஆலயத்திலும், மங்காய் பிள்ளையார் கோவில், சக்தி விநாயகர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. குருசாமி தலைமையில் சுவாமியே சரணம் ஐயப்பா என்ற கோஷங்களுடன் ஏராளமான பக்தர்கள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். இந்த ஆண்டு மாலை அணிந்த பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது.

தொடர்புடைய செய்தி