அரியலூர் நகரிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடைபெற்றது. தலைமையாசிரியர் அம்சவள்ளி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், குழந்தைகளை சரியான நேரத்தில் பள்ளிக்கு அனுப்பி, மாலை 04.10 மணிக்கு அழைத்து வர வேண்டும் என பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், ஆண்டு விழா நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.