சிலிண்டர்லாரிவிபத்து இடத்தைஅமைச்சர்சிவசங்கர் பார்வையிட்டு

0பார்த்தது
அரியலூர் மாவட்டம் வாரணாவாசி பிள்ளையார் கோவில் வளைவில் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி விபத்துக்குள்ளானதில் சிலிண்டர்கள் வெடித்து சிதறின. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். திருச்சியில் இருந்து ஹிந்துஸ்தான் பெட்ரோலிய துறை அதிகாரிகளும் ஆய்வு செய்தனர். போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து, விபத்து குறித்து காவல்துறையினரிடம் கேட்டறிந்து, பாதுகாப்பு பணியை துரிதப்படுத்தவும், போக்குவரத்தை சீரமைக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி