அரியலூர்: அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்த எம்.எல்.ஏ

56பார்த்தது
அரியலூர்: அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்த எம்.எல்.ஏ
அரியலூர் சட்டமன்ற தொகுதி திருமானூர் ஒன்றியம், கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட புதிய அங்கன்வாடி மையத்தினை திறந்து வைத்தார். 

 அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம், கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தில் எனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ. 12.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தினை திறந்து வைத்து சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் திருமானூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயகுமாரி , திருமானூர் ஒன்றிய பெருந்தலைவர் சுமதி அசோகசக்கரவர்த்தி, திமுக ஒன்றிய செயலாளர்கள்  கென்னடி அசோகசக்கரவர்த்தி, மதிமுக ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ்பாபு பிச்சைப்பிள்ளை , கீழக்காவட்டாங்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய கவுன்சிலர் மற்றும் கிராம பொதுமக்கள், பங்கேற்று சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி