அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கான நவம்பர் - 2025 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 28. 11. 2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில், மாவட்ட ஆட்சியரக பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பொ. இரத்தினசாமி, இ. ஆ. ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.