அரியலூர் அரசு கலைக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் (அலகு 1 மற்றும் 2) சார்பில், அரியலூர் தனியார் மருத்துவமனையுடன் இணைந்து சிறப்பு பொது மருத்துவ முகாம் வாலாஜாநகரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமை அரியலூர் தனியார் ஜவுளி ஸ்டோர்ஸ் மற்றும் ரெடிமேட் நிறுவன உரிமையாளர் செல்வகுமரன் தொடங்கி வைத்தார்.