ஜெயங்கொண்டம் பகுதியில் வடமாநில இளைஞர் ஒருவர் உடல் முழுவதும் காயங்களுடன் மயங்கிக் கிடந்த நிலையில், போலீசார் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவர் தெரிவித்தார். அவர் யார், எப்படி உயிரிழந்தார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.