அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 கிராம ஊராட்சிகளிலும் உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5 அன்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 குறித்த விழிப்புணர்வு, ஊராட்சிகளின் சுய மதிப்பீடு, “சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை” கருப்பொருள், சம்பூர்ண ஸ்வச்சதா மற்றும் திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத கிராமங்கள் உருவாக்கம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. பொதுமக்கள், தன்னார்வலர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் அதிகளவில் பங்கேற்க மாவட்ட ஆட்சியர் ந. மிருணாளினி அழைப்பு விடுத்துள்ளார்.