அரியலூர் மாவட்டத்தில், டிசம்பர் 3 அன்று உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கான ஓவியப் போட்டிகள் 4 பிரிவுகளில் நடத்தப்பட உள்ளன. இப்போட்டிகள் வரும் 21ம் தேதி அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.