அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்தில் உள்ள இலந்தைக்கூடம் ஊராட்சியில் அண்ணா வீதி, மருதை நகரில் சாலைகள் தரமற்று இருப்பதால், மழைக்காலங்களில் பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனால் நோய்வாய்ப்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். எனவே, சாலைகளை உடனடியாக சீரமைத்து மேம்படுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். அரசு இப்பிரச்சினையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.