பெரம்பலூா் அருகே நாட்டு வெடிகுண்டுகள் வீசி ரவுடி வெள்ளைக்காளியை கொலை செய்ய முயன்ற வழக்கில் அழகுராஜா (30) மற்றும் அவரது நண்பா்கள் 8 பேரை போலீஸாா் கைது செய்தனா். இதில் அழகுராஜா போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டாா். மேலும் இவ்வழக்கில் தொடா்புடைய விக்னேஸ்வரன் (27), அமானுல்லா (24), இசக்கிமுத்து (எ) ரவி (42), மணி (37), பழனிமுருகன் (29), முனியசாமி (27) ஆகிய 6 பேரை தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.