பெரம்பலூர்-அரியலூர் பிரதானச் சாலையில், அருமடல் பிரிவுச் சாலையில் உள்ள டாஸ்மாக் அருகே நேற்று (மே 23) சுமார் 40 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பெரம்பலூர் போலீஸார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, உயிரிழந்த நபர் யார், அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.