பெரம்பலூா் அருகே எளம்பலூரில் உள்ள ஓம் ஸ்ரீ மஹா வராகி அம்மன் திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அன்று, மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த ரூ. 1,000
மற்றும் ஒரு அடி உயரமுள்ள பித்தளை வேல் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர். மேலும், கோயிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவையும் அவர்கள் உடைத்துள்ளனர். இது குறித்து சோபனா அளித்த புகாரின்ப
ேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.