ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் வைத்தி, தனது தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பெரிய வளையம், தேவமங்கலம், கழுவந் தோண்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு இன்று சென்றார். அங்கு பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என அவர் உறுதியளித்தார். பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், பூரண கும்ப மரியாதை கொடுத்தும் அவரை உற்சாகமாக வரவேற்றனர். கிராமங்களுக்குத் தேவையான வசதிகள் குறித்து பொதுமக்கள் மனுக்களாக அளித்தனர்.